UPDATED : ஜூலை 25, 2026 03:40 PM
ADDED : ஜூலை 25, 2026 03:30 PM
அ நிறம் | அளவு
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அரசாள வந்த அம்மன் கோயில் விழா ஜூலை 20 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் தினமும் மாலையில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. இந்நிலையில், விழாவின் தொடர்ச்சியாக ஜூலை 24 இரவு மகளிர் மன்றத்தினரால் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
பெண்கள் திருவிளக்கேற்றி உலக நன்மை வேண்டியும், மழை வேண்டியும் கூட்டு பிரார்த்தனை செய்தனர். ஏற்பாடுகளை ஹிந்து சமய மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.
--
