/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
லாந்தை பெரியகண்மாய் தென்கலுங்கு மதகுப்பகுதியை சீரமைக்க கோரிக்கை
/
லாந்தை பெரியகண்மாய் தென்கலுங்கு மதகுப்பகுதியை சீரமைக்க கோரிக்கை
லாந்தை பெரியகண்மாய் தென்கலுங்கு மதகுப்பகுதியை சீரமைக்க கோரிக்கை
லாந்தை பெரியகண்மாய் தென்கலுங்கு மதகுப்பகுதியை சீரமைக்க கோரிக்கை
ADDED : ஜூலை 10, 2025 10:51 PM
ராமநாதபுரம்; ராமநாதபுரம் அருகே லாந்தை பெரியகண்மாய் தென்கலுங்கு மதகுப்பகுதியில் துாண்கள் சேதமடைந்துள்ளன. அவற்றை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
பெரிய கண்மாய் காருகுடியில் துவங்கி லாந்தை வரை 8.24 சதுர மைல் நீர் பிடிப்பு பகுதியில் 618 மில்லியன் கன அடி தண்ணீரை தேக்க முடியும். இதன் மூலம் 3962 ஏக்கர் வரை நன்செய், புன்செய் சாகுபடி நடக்கிறது. ஆனால் பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் கண்மாய் துார்ந்து போய் மண் மேடாகிவிட்டது. இதனால் நீர்ப்பிடிப்பு பகுதி குறைந்து விட்டது.
கண்மாய் துார்வாரப்படாமலும், வரத்து கால்வாய்கள் சீரமைக்கப்படாததால் மழை நீர் வீணாகி கடலில் கலக்கிறது. குறிப்பாக ராமநாதபுரம் லாந்தை அருகே பெரிய கண்மாய் மதகுகள் பழுதடைந்து புதர் மண்டியுள்ளது. மதகுபகுதியில் துாண்கள் சேதமடைந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. அக்., நவ., மழைக்காலத்திற்கு முன் லாந்தை பெரிய கண்மாய் தென்கலுங்கு மதகுப்பகுதியை சீரமைக்க பொதுப்பணித்துறை (நீர்வளம்) அதிகாரிகள் முன்வர வேண்டும். அதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.