/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க ஜன.18 கடைசி
/
பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க ஜன.18 கடைசி
ADDED : ஜன 16, 2025 04:50 AM
திருவாடானை: பொங்கல் பரிசு தொகுப்பு ஜன.18., கடைசி நாளாகவும், வேட்டி, சேலை ஜன.31., வரை வாங்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க அரசு அறிவித்தது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு ஆகியவற்றை ஜன.9 முதல் ரேஷன் கடைகளில் வழங்க உத்தரவிடப்பட்டது.
திருவாடானை தாலுகாவில் 85 ரேஷன் கடைகளும், ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் 58 ரேஷன் கடைகளும் உள்ளன. இது குறித்து கூட்டுறவுத்துறை அலுவலர்கள் கூறியதாவது:
திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் அந்தந்தப் பகுதியில் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் ஜன.3 முதல் வீடு, வீடாக சென்று பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வழங்கினர். இதுவரை 70 சதவீதத்திற்கும் மேல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.
வாங்காதவர்கள் ஜன.18க்குள் சென்று வாங்கிக் கொள்ளலாம். வேட்டி, சேலையை பொறுத்தவரை ஜன.31 வரை வாங்கிக் கொள்ளலாம் என்றனர்.

