/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பால் பாதிப்பு
/
ராமநாதபுரத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பால் பாதிப்பு
ராமநாதபுரத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பால் பாதிப்பு
ராமநாதபுரத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பால் பாதிப்பு
ADDED : ஜன 25, 2025 07:20 AM
ராமநாதபுரம் : கடலாடியில் வழக்கறிஞர் சங்கத் துணைத்தலைவர் தாக்கப்பட்டதை கண்டித்து ராமநாதபுரத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு செய்ததால் பணிகள் பாதிக்கப்பட்டன.
கடலாடி வழக்கறிஞர் சங்க துணைத்தலைவராக இருப்பவர் நாகநாதர் துரை. இவர் வழக்கில் சாட்சியம் சொல்லக்கூடாது என்பதற்காக தாக்கப்பட்டு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து ராமநாதபுரம் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற புறக்கணிப்பு செய்தனர். வழக்கறிஞர் சங்க துணைத்தலைவரை தாக்கியயர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தினர். இதன் காரணமாக நேற்று நீதிமன்றத்திற்கு வந்தவர்கள் வழக்குகள் நடக்காததால் பாதிக்கப்பட்டனர்.