/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் ரோட்டோர ஆக்கிரமிப்பு கடைகளுக்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு
/
ராமேஸ்வரத்தில் ரோட்டோர ஆக்கிரமிப்பு கடைகளுக்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு
ராமேஸ்வரத்தில் ரோட்டோர ஆக்கிரமிப்பு கடைகளுக்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு
ராமேஸ்வரத்தில் ரோட்டோர ஆக்கிரமிப்பு கடைகளுக்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு
ADDED : டிச 18, 2024 07:40 AM

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் நீதிமன்றம் செல்லும் ரோட்டோரத்தில் ஆக்கிரமிப்பு கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் அகற்ற வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள நீதிமன்றத்திற்கு தினமும் ஏராளமான மக்கள், வழக்கறிஞர்கள் செல்கின்றனர். இந்த ரோட்டின் வழியாக மத்திய அரசுப் பள்ளி, மின்வாரியம் அலுவலகம் உள்ளது. ரோட்டில் பள்ளி மாணவர்கள், பெற்றோர், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.
இந்த ரோட்டோரத்தில் நவ., முதல் ஜன., வரை கடைகள் அமைத்து ஆக்கிரமிக்கின்றனர். இதனால் வாகன நெரிசலில் மக்கள் அவதிப்படுவதுடன் சில சமயம் நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்து வரும் குற்றவாளிகள் வாகன நெரிசலை பயன்படுத்தி தப்புகின்றனர்.
கடந்த ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டதால் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். உத்தரவை மீறி தற்போது மீண்டும் கடைகள் ஆக்கிரமித்துள்ளதற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ராமேஸ்வரம் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் ஹரிகரன் கூறுகையில், கடந்தாண்டு நீதிமன்றம் உத்தரவிட்ட பின் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். வியாபாரிகள் ஆக்கிரமித்திருப்பது கண்டனத்திற்குரியது. உடனடியாக ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றாவிடில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றார்.