ADDED : நவ 22, 2024 03:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: ஓசூரில் வக்கீல் கண்ணன் தாக்கப்பட்டதை கண்டித்து பரமக்குடி நீதிமன்ற வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல் சங்க தலைவர் பூமிநாதன் தலைமை வகித்தார். செயலாளர் யுவராஜ் முன்னிலை வகித்தார்.
வக்கீல்கள் தொடர்ந்து சமூக விரோதிகளால் கொலை செய்யப்பட்டு வருவதால் வக்கீல்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் கொண்டுவர வேண்டும் என கோஷம் எழுப்பினர்.