/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரயில்வே அஞ்சல் பிரிப்பகத்தை மூடுவதற்கு எதிர்ப்பு வக்கீல்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்

ADDED : டிச 04, 2024 04:44 AM

பரமக்குடி: பரமக்குடி ரயில்வே அஞ்சல் பிரிப்பத்தை மூடும் உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி வக்கீல்கள் சங்கத்தினர் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பரமக்குடி ரயில்வே ஸ்டேஷன் அருகில் 1984 முதல் 40 ஆண்டுகளாக ரயில்வே அஞ்சல் பிரிப்பகம் செயல்படுகிறது. இங்கிருந்து ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் என 100 கி.மீ.,க்கு உட்பட்ட தபால்கள் பிரித்து அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது ஸ்பீடு போஸ்ட் தபால்களை மதுரை சென்று பிரித்து மீண்டும் பரமக்குடி வரும் நிலை இருக்கிறது. இந்நிலையில் பரமக்குடி ரயில்வே அஞ்சல் பிரிப்பகத்தை ஒட்டுமொத்தமாக மதுரைக்கு மாற்றும் உத்தரவை அஞ்சல் துறை பிறப்பித்துள்ளது.
இதனால் மாணவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவருக்கும் தபால்கள் கிடைப்பதில் தாமதமாகும் என்பதால் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதே போல் நீதிமன்ற அவசர தபால்களும் கிடைப்பதில் தாமதம் ஏற்படும் என்பதால் பல்வேறு இன்னல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதனை கண்டித்து நேற்று பரமக்குடி வக்கீல்கள் சங்க தலைவர் பூமிநாதன் தலைமையில் பரமக்குடி ரயில்வே அஞ்சல் பிரிப்பு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. செயலாளர் யுவராஜ் முன்னிலை வகித்தார். அனைத்து வக்கீல்களும் கலந்து கொண்டனர். பொருளாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.
இந்நிலையில் தபால் துறையின் செயலை கண்டித்து நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் பரமக்குடி வக்கீல் சங்கத்தினர் ஈடுபட்டனர்.