ADDED : மார் 05, 2024 04:18 AM

அ நிறம் | அளவு
பரமக்குடி : -பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வக்கீல் சங்கத்தினர், தமிழ்நாடு உயர் நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக நடைமுறைப்படுத்த வேண்டும், என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் கடந்த சில நாட்களாக தமிழ்நாடு உயர் நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக நடைமுறைப்படுத்த வேண்டும், என கோரிக்கை விடுத்து வக்கீல்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பரமக்குடியில் வக்கீல்கள் பணியை புறக் கணித்து நீதிமன்றம் முன் கோஷங்களை எழுப்பினர்.
வக்கீல் சங்கத் தலைவர் சேது பாண்டியன், செயலாளர் காமராஜ், பொருளாளர் அரவிந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
