/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கமுதியில் புதிய நீதிமன்றம் அமைக்க நிதி ஒதுக்க வழக்கறிஞர்கள் கோரிக்கை
/
கமுதியில் புதிய நீதிமன்றம் அமைக்க நிதி ஒதுக்க வழக்கறிஞர்கள் கோரிக்கை
கமுதியில் புதிய நீதிமன்றம் அமைக்க நிதி ஒதுக்க வழக்கறிஞர்கள் கோரிக்கை
கமுதியில் புதிய நீதிமன்றம் அமைக்க நிதி ஒதுக்க வழக்கறிஞர்கள் கோரிக்கை
ADDED : செப் 23, 2024 05:15 AM
கமுதி, : -கமுதியில் நீதிமன்றம் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருவதால் புதிய கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
முதுகுளத்துார் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிர்மல்குமார், மாலா அலுவலகப் பணிகள், வழக்கு எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்தனர். பின்பு நீதிமன்ற கோப்புகள் முறையாக பின்பற்ற வேண்டும் என பணியாளருக்கு அறிவுறுத்தினர். வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்தனர். இதே போன்று கமுதி மாவட்ட உரிமையியல், குற்றவியல், நீதிமன்ற நடுவர் மன்றத்தில் ஆய்வு செய்தனர்.
அப்போது கமுதி வழக்கறிஞர் சங்கம் சார்பில் தலைவர் ரமேஷ் கண்ணன் தலைமையில் வழக்கறிஞர்கள் பல்வேறு கோரிக்கை அடங்கிய மனுக்களை அளித்தனர்.
அதில் கூறியதாவது, கமுதியில் 30 ஆண்டுகளுக்கு மேலாகவே நீதிமன்றம் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. எனவே புதிய கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். கமுதி நீதிமன்ற வளாகத்தில் கூடுதலாக மாவட்ட அமர்வு நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், நீதித்துறை நடுவர் மன்றம் அமைக்க சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்க வேண்டும் என வலியுறுத்தினர். சங்கச்செயலாளர் சிவராமகிருஷ்ணன்,பொருளாளர் நேதாஜி சாரதி பங்கேற்றனர்.