ADDED : மே 18, 2025 12:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார் பஜார் பகுதியில் அ.தி.மு.க., சார்பில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க., அரசை கண்டித்து துண்டுபிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முனியசாமி, மன்ற இணைச் செயலாளர்கள் பாண்டியன்,சுந்தரபாண்டியன், ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் சுதா பரமசிவன் முன்னிலை வகித்தனர். முதுகுளத்துார் பஜார், பஸ் ஸ்டாண்டில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.