/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவாடானையில் சாய்ந்த நெற்பயிர்கள்
/
திருவாடானையில் சாய்ந்த நெற்பயிர்கள்
ADDED : டிச 15, 2024 07:49 AM

திருவாடானை : திருவாடானை தாலுகாவில் பெய்த கன மழையால் நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.திருவாடானை தாலுகாவில் 26 ஆயிரம் எக்டேரில் சாகுபடி பணிகள் துவங்கியது. தற்போது நெற்கதிர் வளர்ந்த நிலையில் உள்ளதால் இத் தாலுகாவில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்கிறது. நேற்று முன்தினம் பெய்த மழையால் கருமொழி, ஆட்டூர், கோவனி, கூகுடி, நீர்க்குன்றம், கருப்பூர் போன்ற 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெற்பயிர்கள் நிலத்தில் சாய்ந்துள்ளன.
தொடர்ந்து மழை பெய்தால் மகசூல் பாதிக்கும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கருமொழி, கூகுடி விவசாயிகள் கூறியதாவது:
குறுகிய கால நெற்பயிர்களான ஆர்.என்.ஆர்., 16:38 போன்ற ரகங்களை விதைத்தோம். தற்போது பெய்த மழையால் வளர்ந்துள்ள நெற்பயிர்கள் நிலத்தில் சாய்ந்து விட்டது. இந்த ஆண்டு முதல் கட்டமாக விதைப்பு பணியில் ஈடுபட்ட போது மழை பெய்து நிலங்களில் தண்ணீர் தேங்கியதால் முளைப்புத் தன்மையை இழந்தது.
இதனால் மீண்டும் விதைத்தோம். தற்போது பயிர்கள் வளர்ந்து வரும் நிலையில் மழை பெய்வதால் குறுகிய கால நெற்பயிர்கள் சாய்ந்து விட்டன. கடன் வாங்கி விவசாயம் செய்தவர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது என்றனர்.