ADDED : பிப் 10, 2026 05:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு கல்லுாரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள், நீண்டகாலமாகப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். நேற்று திருவாடானை அரசு கல்லுாரி வாயில் முன்பாக விரிவுரையாளர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஊதிய உயர்வு. வருங்கால வைப்பு நிதி, பெண் விரிவுரையாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தினர். கிளை தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். 20 க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர். கிளைச் செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.

