/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சட்டப்பணிகள் ஆணைக்குழு விழிப்புணர்வு கண்காட்சி
/
சட்டப்பணிகள் ஆணைக்குழு விழிப்புணர்வு கண்காட்சி
ADDED : அக் 31, 2024 01:13 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது.
மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு துவக்கி வைத்தார். இதில் பங்கேற்ற பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதில் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி எஸ்.உத்தமராஜ், விரைவு மகிளா நீதிபதி பி.சி.கோபிநாத், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சி.மோகன்ராம், சார்பு நீதிபதி எம்.அகிலாதேவி, சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் எஸ்.பிரசாத், நீதித்துறை நடுவர் எண் 2 மாஜிஸ்திரேட் பிரபாகரன், கூடுதல் மகிளா நீதிபதி இ.வெர்ஜின் வெஸ்டா, வழக்கறிஞர் சங்கத்தலைவர் எஸ்.ஜே. இப்ராஹிம், மாவட்ட அரசு வழக்கறிஞர் முனியசாமி மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் செய்திருந்தனர்.