நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி அருகே போகலுார் ஒன்றியம் காமன்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
தலைமை ஆசிரியர் கருப்புசாமி தலைமை வகித்தார். வட்ட சட்டப் பணிகள் அலுவலர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். வக்கீல் பிரபு பங்கேற்று மாணவர்கள் மத்தியில் சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து மாணவர்களின் ஒழுக்கம், கல்வி சார்ந்து வழிகாட்டினார். பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர்.

