/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எலுமிச்சை பழம் விலை உயர்வு: கிலோ ரூ.200
/
எலுமிச்சை பழம் விலை உயர்வு: கிலோ ரூ.200
ADDED : ஏப் 24, 2025 06:49 AM

ராமநாதபுரம்: கோடைகாலம் என்பதால் தேவை அதிகரித்து, வரத்து குறைவால் கடந்த மாதம் கிலோ ரூ.100 வரை விற்ற எலுமிச்சைப் பழம், தற்போது விலை உயர்ந்து கிலோ ரூ.170 முதல் ரூ.200 வரை தரம், பழத்தின் அளவிற்கு ஏற்றவாறு விற்கப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் குறைந்த அளவே காய்கறி, பழங்கள் சாகுபடி செய்வதால் வெளி மாவட்டங்களை விட விலைச் சற்று கூடுதலாக உள்ளது.குறிப்பாக எலுமிச்சை பழங்களை மதுரை, திண்டுக்கல் போன்ற வெளியூர்களில் இருந்து வாங்கி வந்து விற்கின்றனர்.
எலுமிச்சை பழம் கடந்த மாதம் கிலோ ரூ.100க்கு விற்றது. இந்த வாரம் வரத்து குறைந்து கிலோ ரூ.200க்கு விற்கப்படுகிறது.
வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் எலுமிச்சை பழத்தின் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது.
பெரிய பழம் ஒன்று ரூ.15 வரை விற்கிறோம் என வியாபாரிகள் கூறினர்.

