/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பிப்.13 முதல் 28 வரை தொழுநோய் முகாம்
/
பிப்.13 முதல் 28 வரை தொழுநோய் முகாம்
ADDED : பிப் 13, 2025 06:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலாடி: கடலாடி வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்று தொழுநோய் கண்டுபிடிப்பு முகாம் பிப்.,13 முதல் 28 வரை நடக்க உள்ளது.
வீடு வீடாக தொழுநோய் கண்டுபிடிப்பு பணியில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக ஆண், பெண் களப்பணியாளர்கள் செல்கின்றனர். உடலில் உள்ள உணர்ச்சியற்ற தேமல், தோலில் மினுமினுப்பு, நரம்புகள் தடித்திருத்தல், கை கால்களில் உணர்ச்சியற்ற நிலை தொழுநோயின் அறிகுறிகளாகும். அதற்கான இலவச பரிசோதனை செய்து கொண்டு உரிய சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட சுகாதார அலுவலர் தெரிவித்துள்ளார்.