/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நடுவுல கொஞ்சம் ரோட்டை காணோமுங்க; பக்தர்கள் அவதி
/
நடுவுல கொஞ்சம் ரோட்டை காணோமுங்க; பக்தர்கள் அவதி
ADDED : மார் 06, 2024 05:21 AM

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே மாடகோட்டை முனீஸ்வரர் கோயிலுக்கு செல்லும் ரோடு பல ஆண்டுகள் சீரமைக்கப்படாத நிலையில் கோயிலுக்கு செல்லும் பக்தர்களும், இதை பயன்படுத்தும் 10க்கும் மேற்பட்ட கிராம மக்களும் சிரமப்படுகின்றனர்.
ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து இளையான்குடி ரோட்டில் மாடக்கோட்டை விலக்கு வழியாக மாடகோட்டை முனீஸ்வரர் கோயில் மற்றும் சாத்தமங்கலம், சீனாங்குடி, சேத்திடல் வண்டல் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கிராமங்களுகு செல்வதற்கு ரோடு வசதி உள்ளது.
இந்த ரோட்டில் அப்பகுதி உள்ள கிராமத்தினரும், கோயிலுக்கு செல்லும் பக்தர்களும் செல்கின்றனர். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கோயிலுக்கு செல்லும் ரோடு சீரமைக்கப்படாத நிலையில் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது.
இதனால் நடுவுல கொஞ்சம் காணோம்.. என்பது போல் ரோடு சேதமடைந்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்களும் அவ்வழியாக செல்லும் விவசாயிகளும் அவதியடைகின்றனர்.
ரோட்டில் ஒருபுறம் ராமநாதபுரம் மாவட்ட கிராமங்களும், மறுபுறம் சிவகங்கை மாவட்ட கிராமங்களும் வருவதால் இந்த ரோட்டை சீரமைப்பதில் இரு மாவட்ட அதிகாரிகளும் அலட்சியமாக இருப்பதாக கிராமத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே அதிகாரிகள் ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே மாடக்கோட்டை முனீஸ்வரர் கோயிலுக்கு செல்லும் ரோடு சேதமடைந்துள்ளது.

