/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வாங்க பழகலாம்: கோடை கால நீச்சல் பயிற்சி ஏப்.1 முதல் துவக்கம்: மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு
/
வாங்க பழகலாம்: கோடை கால நீச்சல் பயிற்சி ஏப்.1 முதல் துவக்கம்: மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு
வாங்க பழகலாம்: கோடை கால நீச்சல் பயிற்சி ஏப்.1 முதல் துவக்கம்: மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு
வாங்க பழகலாம்: கோடை கால நீச்சல் பயிற்சி ஏப்.1 முதல் துவக்கம்: மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு
ADDED : மார் 27, 2025 07:23 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மக்கள், மாணவர்கள் பயனடையும் வகையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வள்ளல் அப்துல் ரகுமான் நீச்சல்குளத்தில் கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் ஏப்.,1 முதல் ஜூன் 8 வரை நடக்கிறது.
இம்முகாமில் நீச்சல் பயிற்சி வகுப்பில் சிறுவர், சிறுமியர், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் நீச்சல் கற்பிக்கப்படும். பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் சிறுவர்கள் எட்டு வயதிற்கு மேற்பட்டவர்களாக ( உயரம் 125 செ.மீ., அதற்கு மேல்) இருக்க வேண்டும். நீச்சல் உடை அணிந்து வர வேண்டும்.
நீச்சல் பயிற்சிக் கட்டணம் ரூ.1770 உடன் 18 சதவீதம் ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படும். ஆன்-லைனில் கட்டணத்தை செலுத்தலாம். ஏப்.1 முதல் 13 வரை, ஏப்.15 முதல் 27 வரை, ஏப். 29 முதல் மே 11 வரை, மே 13 முதல் 25 வரை, மே 27 முதல் ஜூன் 8 வரை என தலா 12 நாட்கள் வீதம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. நீச்சல் பயிற்சி பெறுபவர்கள் பெயர், அலைபேசி எண், ஆதார் கார்டு எண் கொண்டுவர வேண்டும். காலை 6:00 முதல் 7:00மணி வரை நீச்சல் கற்றுக்கொள்பவர்கள், 7:00 முதல் 9:00மணி வரை சாந்தாதாரர்கள், 10:00 முதல் 11:00மணி கற்றுக்கொள்பவர்கள், 11:00 முதல் மதியம் 12:00மணி வரை பெண்கள், மாலை 4:00 முதல் 6:00 மணி வரை சந்தாதாரர்களுக்கு என தனித்தனியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தினேஷ்குமார் கூறுகையில், கோடைகால நீச்சல் பயிற்சி குறித்து பள்ளிகளுக்கு சென்று மாணவர்களிடம் நோட்டீஸ் வழங்கி அழைப்பு விடுத்துள்ளோம். முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் கட்டணத்தை dsormdramd@gmail.com இணையதளம் வழியாக மட்டும் செலுத்த வேண்டும்.
கோடை கால முகாமில் பயிற்சி வகுப்பு முடித்தவர்களுக்கு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 99766 91417 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.