/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடக்கும் வேளையில் திருப்புல்லாணி மகிமையை அறிந்து கொள்வோம் புராண இதிகாச பெருமை கொண்டது
/
ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடக்கும் வேளையில் திருப்புல்லாணி மகிமையை அறிந்து கொள்வோம் புராண இதிகாச பெருமை கொண்டது
ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடக்கும் வேளையில் திருப்புல்லாணி மகிமையை அறிந்து கொள்வோம் புராண இதிகாச பெருமை கொண்டது
ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடக்கும் வேளையில் திருப்புல்லாணி மகிமையை அறிந்து கொள்வோம் புராண இதிகாச பெருமை கொண்டது
ADDED : ஜன 15, 2024 11:13 PM

திருப்புல்லாணி: ராம ஜென்ம பூமி கும்பாபிஷேகம் அயோத்தியில் ராமபிரானுக்கு கோயில் எழுப்பி ஜன.22ல் சுப வேளையில் நடக்க உள்ளது.
சீதாதேவி பிறந்த ஊரில் இருந்து ஆயிரக்கணக்கானோர் விழாக்கோலமாக பொருட்களை சீதனமாக ராமர் பிறந்த அயோத்திக்கு கொண்டு வந்து ஆனந்தம் அடைந்து வருகின்றனர். ராமருடைய பிறப்பு முதல் பட்டாபிஷேகம் வரையிலும் ராமாயணம் என்ற காவியம் உருவாக காரணமாக இருந்த புண்ணிய பூமி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்புல்லாணி.
ராமபிரானின் பாதம் பட்ட திருப்புல்லாணியில் நாம் என்ன விழா எடுக்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பான விஷயத்தை கீழக்கரை தொல்லியல் ஆய்வாளர் விஜயராமு எழுப்பியுள்ளார். அவர் கூறியதாவது:
திருப்புல்லாணியின் சிறப்பு பல சதுர் யுகங்களுக்கு முன்பு புல்லவர், காலவர், கண்ணவர் ஆகிய மூன்று ரிஷிகளுக்கும் பகவான் பெருமாள் அரச மரமாக காட்சி அளித்தார். பின் அவர்களின் வேண்டுதலை ஏற்று ஆதிஜெகநாதப் பெருமாளாக காட்சி கொடுத்த இடமே இத்திருத்தலம்.
பெருமாள் காட்சி கொடுத்த அரச மரம் இத்தலத்தில் இன்றும் ஸ்தல விருட்சமாக உள்ளது. பல ஆண்டுகளாக புத்திர பாக்கியம் இல்லாத தசரத மகா சக்கரவர்த்தி இத்தலத்தில் உள்ள பெருமானை வேண்டினார். பெருமாள் புத்திர பாக்கியத்திற்கான மூல மந்திர உபதேசத்தையும் திருக்கண்ணமுதம் எனப்படும் பாயாசத்தையும் வழங்கினார்.
அவரே ராமபிரானாக தசரதனுக்கு மகனாக அவதரித்தார். அதனை முன்னிட்டு இக்கோயிலில் பிரசாதமாக பாயாசம் வழங்கப்படுகிறது. பாயாசத்தை புத்திர பாக்கியம் வேண்டுவோர் அருந்துகின்றனர். சீதையை மீட்க ராமர் இலங்கை செல்லும் முன் சேது பாலம் அமைக்க மூன்று நாட்கள் இத்தலத்தில் தான் தங்கி இருந்தார்.
ராவணனை வதம் செய்து சீதையை மீட்க ராமருக்கு பெருமாள் சக்கராயுதம் வழங்கிய இடம் திருப்புல்லாணி. சீதையை மீட்டு வந்த பின் ராமருக்கு பட்டாபிஷேகம் முதலில் செய்த இடம் திருப்புல்லாணி. இது போன்ற இன்னும் பல சிறப்புகள் இந்த கோயிலில் உள்ளது.
இங்கு ஸ்தல வரலாறு பற்றி வியாசர் பகவானால் எழுதப்பட்ட 18 புராணங்களில் ஒன்றான ஆக்கினேய புராணத்தில் 9 அத்தியாயங்களில் பேசப்படுகிறது. வால்மீகி ராமாயணம், துளசி ராமாயணம், மகாவீர சரிதம், ரகுவம்சம் போன்ற நுால்களில் இத்தலம் குறிக்கப்படுவது தான் இதன் தொன்மைக்கு சான்றாகும்.
மேலும் புல்லை அந்தாதி, திருப்புல்லாணி மாலை, தெய்வச் சிலையான் துதி, வாசன மாலை, புல்லாணி பெருமாள் நழுங்கு போன்ற நுால்களும் இக்கோயிலின் சிறப்பை பற்றி கூறுகின்றன என்றார்.