/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கண்மாயில் கரையை காணோமுங்க... டி.ஆர்.ஓ.,வை விவசாயிகள் முற்றுகை
/
கண்மாயில் கரையை காணோமுங்க... டி.ஆர்.ஓ.,வை விவசாயிகள் முற்றுகை
கண்மாயில் கரையை காணோமுங்க... டி.ஆர்.ஓ.,வை விவசாயிகள் முற்றுகை
கண்மாயில் கரையை காணோமுங்க... டி.ஆர்.ஓ.,வை விவசாயிகள் முற்றுகை
ADDED : ஆக 26, 2025 03:34 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே தெற்கு பெருவயல் கிராமத்தில் கண்மாய் கரையை தரைமட்டமாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் மாவட்ட வருவாய் அலுவலரை முற்றுகையிட்டனர்.
தெற்கு பெருவயல் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். கூட்டமாக உள்ளே செல்ல போலீசார் அனுமதி மறுக்கும் காரணத்தால் அவர்களுக்கு தெரியாமல் கலெக்டர் அலுவலக வாய்க்கால் ஓடை வழியாக குறைதீர்க்கும் முகாம் நடைபெறும் கூட்ட அரங்கத்திற்குள் நுழைந்தனர்.
அதன் பிறகுபோலீசார் இது போல் உள்ளே வரக்கூடாது என விவசாயிகளைகண்டித்தனர். அப்போது கலெக்டர் இல்லாததால் மக்களிடம் மனு வாங்கிக் கொண்டிருந்தமாவட்டவருவாய் அலுவலர் கோவிந்தராஜலுவை விவசாயிகள் முற்றுகையிட்டு கோரிக்கை மனு அளித்தனர்.
மண் அள்ளும் இயந்திரம் உதவியுடன் பெருவயல் கண்மாய் கரையில் இருந்த சீமைக்கருவேல மரங்களை வேருடன் சிலர் தோண்டி சென்றுவிட்டனர்.
அப்போது கண்மாய்கரை முழுமையாக தரைமட்டமாகிவிட்டது. இதனால் மழை பெய்தால் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது. எனவே கண்மாய்க்கரையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவர்களுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
உங்களது மனுவின் அடிப்படையில் பொதுப்பணித்துறை (நீர்வளம்) மூலம் போலீசில் புகார் அளித்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட வருவாய் அலுவலர் கூறினார்.
இதில் சமரசம் அடைந்த விவசாயிகள் கலைந்து சென்றனர்.