/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கண்மாயை காணோம், வாய்க்கால் துார்வாரல காப்பீட்டுத் தொகை வரல: விவசாயிகள் குமுறல் கூச்சலிட்ட நபரை கண்டித்த கலெக்டர்
/
கண்மாயை காணோம், வாய்க்கால் துார்வாரல காப்பீட்டுத் தொகை வரல: விவசாயிகள் குமுறல் கூச்சலிட்ட நபரை கண்டித்த கலெக்டர்
கண்மாயை காணோம், வாய்க்கால் துார்வாரல காப்பீட்டுத் தொகை வரல: விவசாயிகள் குமுறல் கூச்சலிட்ட நபரை கண்டித்த கலெக்டர்
கண்மாயை காணோம், வாய்க்கால் துார்வாரல காப்பீட்டுத் தொகை வரல: விவசாயிகள் குமுறல் கூச்சலிட்ட நபரை கண்டித்த கலெக்டர்
ADDED : அக் 19, 2024 04:57 AM

ராமநாதபுரம் : மாவட்டத்தில் பரமக்குடி, நயினார்கோவில், கமுதி ஆகிய இடங்களில் வனவிலங்குளால் பயிர் சேதம் அதிகரித்துள்ளது. கீழத்துாவல் கண்மாயை காணவில்லை. பலமுறை மனுஅளித்தும் கால்வாய்களை துார்வாரவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ஜீனு, கலெக்டரின் நேர்முக உதவியார் பாஸ்கரமணியன் முன்னிலை வகித்தனர்.
கண்ணப்பன், பரமக்குடி: பரளையாறு ஆறு வழித்தடத்தை துார்வாரவேண்டும். மாங்குடி கண்மாய் துார்வாரி, கருவேல மரத்தை அகற்ற பலமுறை மனுஅளித்தும் நடவடிக்கையும் இல்லை. அப்போது கலெக்டர் பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் பதிலளிக்க கூறினார். அதைப்பொருட்படுத்தால் அலுவலரை கண்ணப்பன் ஒருமையில் உங்க அதிகாரிகளை வரச்சொல்லுங்க நீங்க சரியில்லை என சத்தமாம பேசினார்.
கலெக்டர் கண்டிப்பு: அதிகாரிகளை மரியாதையாக பேசவேண்டும். உங்கள் குறைகளை என்னிடம் தெரிவிக்க வேண்டும். மாறாக அதிகாரிகளை சத்தமிடக்கூடாது என கண்ணப்பனை கலெக்டர் கண்டித்தார்.
மைக்கேல், முதுகுளத்துார்: விவசாயநிலங்களில் தாழ்வான மின்ஓயர்கள் சென்றது. அவற்றை உடனடியாக அகற்றியுள்ளனர். கலெக்டருக்கு நன்றி தெரிவித்து சால்வை அணிவித்தார். முத்துசெல்லாபுரத்தில் ரோடு வசதியின்றி மழைக்காலத்தில் 10 கி.மீ., மாணவர்கள் நடந்து செல்கின்றனர்.
கலெக்டர்: ரோடு அமைத்துதரப்படும், ஊருணி, நீர்நிலைகளை துார்வர நடவடிக்கை எடுக்கப்படும்.
பாஸ்கரபத்மநாபன், பரமக்குடி: வனவிலங்குகள் தொந்தராவல் விவசாயம் செய்யமுடியவில்லை. சேதம் மதிப்பீடு குறைவாக கணக்கிடப்படுகிறது. நிரந்தர தீர்வு வேண்டும்.
கலெக்டர்: வனவிலங்குகள் பயிர்கள் சேதம் வனத்துறை, வேளாண் அதிகாரிகள் விசாரணை செய்து அறிக்கை தர வேண்டும். மீண்டும் புகார் வரக்கூடாது.
முத்துராமலிங்கம் கமுதி: தரக்குடி கண்மாயை துார்வார வேண்டும்.
கலெக்டர்: நீர்நிலைகளை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும், கண்மாய் துார்வாரி தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
பாலசுந்தரமூர்த்தி ராமநாதபுரம்: வைகை அணையில் இருந்து மாவட்டத்திற்கு பாசன தண்ணீரை பெற்றுத்தர வேண்டும். பாசனத்திற்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலெக்டர்: மாவட்டத்திற்குரிய வைகை தண்ணீர் பெற்றுத்தரப்படும்.
கணேசன், முதுகுளத்துார்: கீழத்துாவல் கண்மாய் பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல் உள்ளது. இக்கண்மாய் யார் கட்டுப்பாட்டில் உள்ளது எனத்தெரியவில்லை. பொதுப்பணித்துறை, ஊரகவளர்ச்சிதுறையில் இல்லை என்கின்றனர்.
கலெக்டர் : கீழத்துாவல் கண்மாய் விபரத்தை மனுவாக தாருங்கள் விசாரித்து துார்வார நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து ஒன்றியங்கள் வாரியாக விவசாயிகள் பேசினர். இதில், 2023-24க்கு பயிர்காப்பீட்டுத்தொகை விடுபட்ட கிராமங்களுக்கு வழங்க வேண்டும்.
நகைக்கடன் தள்ளுபடி ரசீது தர வேண்டும். கூட்டுறவு சங்கத்தின் பயிர்கடன் பெற மூவிதல் சான்றிதழ் உடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். கோரிக்கைகள், குறைகள் நிவர்த்தி செய்யப்படும், கூட்டத்தில் துறை அதிகாரிகள் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.

