/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க விருப்ப கடிதம்

ADDED : பிப் 17, 2024 02:11 AM
ராமநாதபுரம்:போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு செய்வதற்கான விருப்ப கடிதம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தின் போது ஓய்வூதியர்கள் சார்பில் மருத்துவக்காப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். தமிழகத்தில் 8 போக்குவரத்து கோட்டங்களில் உள்ள 24 மண்டலங்கள், அதில் 235 பணிமனைகள் உள்ளன. இங்கு பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள் ஒரு லட்சம் பேர் உள்ளனர்.
மருத்துவ காப்பீடு செய்வதற்காக அரசு போக்குவரத்துக்கழகங்கள் சார்பில் இவர்களிடம் விருப்பக் கடிதம் கேட்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியர்கள் அமைப்பின் மண்டல துணை செயலாளர் மணிக்கண்ணு கூறியதாவது:
ஓய்வூதியர்களின் கோரிக்கைகளில் ஒன்றான மருத்துவக் காப்பீட்டிற்கு விருப்ப கடிதம் பணி புரிந்த பணிமனைகளில் வழங்க கேட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
அதே நேரம் பணியில் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவப்படி மாதம் ரூ.300 ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும்.
எட்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும். தொழிலாளர்கள் வாழ வழி கேட்டால் அரசு வைத்தியத்திற்கு வழி சொல்கிறது என்றார்.