/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கருணைக்கொலை செய்வதற்கு வேண்டி முதல்வருக்கு கடிதம்; கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்
/
கருணைக்கொலை செய்வதற்கு வேண்டி முதல்வருக்கு கடிதம்; கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்
கருணைக்கொலை செய்வதற்கு வேண்டி முதல்வருக்கு கடிதம்; கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்
கருணைக்கொலை செய்வதற்கு வேண்டி முதல்வருக்கு கடிதம்; கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்
ADDED : ஏப் 13, 2025 06:33 AM

பரமக்குடி: 25 ஆண்டுகளுக்கும் மேலாக கவுரவ விரிவுரையாளராக வைத்திருப்பதற்கு பதில் கருணைக் கொலை செய்ய வேண்டி முதல்வர் ஸ்டாலினுக்கு பரமக்குடி உள்ளிட்ட மாநிலம் முழுவதும் உள்ள கவுரவ விரிவுரையாளர்கள் கடிதம் எழுதி வருகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு கலைக் கல்லுாரி யு.ஜி.சி., தகுதி பெற்ற கவுரவ விரிவுரையாளர்கள் சங்கத்தின் நிறுவன தலைவர் சிவகுமார் கூறியதாவது:
நான் பரமக்குடி அரசு கலைக் கல்லுாரியில் 2009 ஆக.,17 முதல் 16 ஆண்டுகளுக்கும் மேலாக யு.ஜி.சி., கல்வித் தகுதியில் பணியாற்றி வருகிறேன். தொடர்ந்து என்னை போன்றவர்களின் வாழ்வாதாரம் காக்க அரசுக்கு கோரிக்கை விடுத்து போராடி வருகிறோம்.
தமிழக அரசு இதுவரை ஒரு கோரிக்கையையும் நிறைவேற்றாத நிலையில் நவீன கொத்தடிமைகளாக அரசும், உயர்கல்வித்துறை அதிகாரிகளும் வஞ்சித்து வருகின்றனர்.
போராட்டங்கள் நடத்தி மனதளவிலும், உடல் அளவிலும் பாதிக்கப்பட்டுள்ளோம்.
தேர்தல் சமயத்தில் மட்டும் வாக்குறுதிகளை அளிப்பதும், ஆட்சியில் அமர்ந்த பின் அதனை காற்றில் பறக்க விடுவதுமாக உள்ளனர். குறைந்த ஊதியத்தில் பணி செய்வது, 11 மாதம் மட்டுமே ஊதியம் வழங்குவதால் வயதான பெற்றோர் மற்றும் குடும்பத்தை கவனிக்க முடியாத நிலை உள்ளது.
நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையாவது சட்டசபை கூட்டத் தொடரில் நிறைவேற்றுங்கள். இல்லையெனில் நடை பிணமாய் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும் எங்களை கருணைக்கொலை செய்து கொள்ள விடுங்கள், என தாழ்மையுடன் அரசை கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

