/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் பள்ளியில் நுாலக வாசிப்பு இயக்கம்
/
ராமேஸ்வரம் பள்ளியில் நுாலக வாசிப்பு இயக்கம்
ADDED : ஜன 09, 2024 12:15 AM

ராமேஸ்வரம், ; ராமேஸ்வரம் பள்ளியில் என்.எஸ்.எஸ்., சார்பில் நுாலக வாசிப்பு இயக்கம் 2024 என்ற திட்டத்தை மாணவர்கள் துவக்கினர்.
தமிழக அரசு பொதுமக்கள் அனைவரிடமும் புத்தகங்கள், செய்தி தாள்கள் வாசிக்கும் பழக்கத்தை பரவலாக்கவும், வாசிப்பதை மேம்படுத்தவும் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
அதன்படி ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் இந்தாண்டு முழுவதும் நுாலக வாசிப்பை மேம்படுத்தி வீட்டில் நுாலகம் அமைத்து மாணவர்களிடம் வாசிப்பதை ஊக்கப்படுத்தும் விதமாக நேற்று நுாலக வாசிப்பு இயக்கம் 2024 என்ற திட்டத்தை துவக்கினர்.
இதில் ஏராளமான மாணவர்களிடம் தினமலர் நாளிதழ் கொடுத்து வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி பெருந்திரள் நாளிதழ் வாசிப்பு நடந்தது. மேலும் மாணவர்கள் ஊர்வலமாக சென்று நுாலகத்தில் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தினர்.
தலைமை ஆசிரியர் ஜெயா கிரிஸ்டல் ஜாய், ராமநாதபுரம் மாவட்ட என்.எஸ்.எஸ்., தொடர்பு அலுவலர் ஜெயகாந்தன், பொறியாளர் சங்க பொறியாளர் பட்டய தலைவர் முருகன், இலக்கிய ஆர்வலர் ராமச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.