/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எல்.ஐ.சி., ஊழியர்கள் வெளிநடப்பு போராட்டம்
/
எல்.ஐ.சி., ஊழியர்கள் வெளிநடப்பு போராட்டம்
ADDED : ஜன 11, 2024 04:52 AM

ராமநாதபுரம், : ராமநாதபுரம் எல்.ஐ.சி., அலுவலக முதல்நிலைஅதிகாரிகள், வளர்ச்சி அதிகாரிகள், காப்பீட்டு கழக ஊழியர் சங்கங்கள் இணைந்து கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு மணிநேரம் வெளிநடப்பு போராட்டம் நடத்தினர்.
ராமநாதபுரம் காப்பீட்டு ஊழியர் சங்க கிளைச் செயலாளர்பிரதாப் தலைமை வகித்தார். ஊதிய உயர்வுபேச்சுவார்த்தையை எல்.ஐ.சி., நிர்வாகம் உடனே துவங்கவேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
முதல் நிலை அதிகாரிகள் சங்க நிர்வாகி ஈஸ்வரன்,வளர்ச்சி அதிகாரிகள் சங்க நிர்வாகி விக்னேஷ், காப்பீட்டுகழக ஊழியர் சங்க கிளை தலைவர் முத்துப்பாண்டி,பொறுப்பாளர் ராஜேஷ் செல்வகுமார் உட்பட பலர்பங்கேற்றனர்.