/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடலோரங்களில் பேரழிவை தடுக்க உயிர்வேலி அமைக்கும் திட்டம்
/
கடலோரங்களில் பேரழிவை தடுக்க உயிர்வேலி அமைக்கும் திட்டம்
கடலோரங்களில் பேரழிவை தடுக்க உயிர்வேலி அமைக்கும் திட்டம்
கடலோரங்களில் பேரழிவை தடுக்க உயிர்வேலி அமைக்கும் திட்டம்
ADDED : நவ 01, 2024 04:29 AM
ராமநாதபுரம் : சுனாமி போன்ற கடல் சீற்றங்களில் கடலோரங்களில் ஏற்படும் பேரழிவுகளை தடுக்கும் பொருட்டு உயிர்வேலி அமைக்கும் திட்டத்தில் சவுக்கு, பனை மரக்கன்றுகளை நடுவதற்கு வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழக வனத்துறை சார்பில் பல்லுயிர் பரவல், பசுமையாக்கல் திட்டத்தில் 8 முதல் 10 அடி உயர மரக்கன்றுகள் உற்பத்தி செய்து விவசாயிகள், பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
இதே போல பசுமை தமிழக இயக்கம் சார்பில் உயிர்வேலி திட்டம் கடலோர மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.
இதன்படி சுனாமி போன்ற கடல் சீற்றங்களில் கடலோரங்களில் பேரழிவுகளை தடுக்கும் பொருட்டு சவுக்கு, பனை மரக்கன்றுகளை நடுவதற்கு வனத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
ஏற்கனவே பேரலையை தடுக்கும் மாங்குரோவ் காடுகள் உள்ள இடங்களை தவிர்த்து பிற இடங்களில் உயிர்வேலி அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.