/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நண்பரை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள்
/
நண்பரை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள்
ADDED : ஜன 29, 2025 01:38 AM

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் நண்பர் பிரபு தேவாவை கத்தியால் குத்திக்கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
ராமநாதபுரம் காட்டுபிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த பிரபாகரன் மகன் பிரபுதேவா 28. இவரது நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் மகன் நாகராஜ் 23. இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்தது. இதில் 2023 பிப்., 11ல் பிரபுதேவாவை கத்தியால் குத்தி நாகராஜ் கொலை செய்தார்.
பிரபுதேவா தாயார் முருகேஸ்வரி புகாரில் நாகராஜை சிறப்பு எஸ்.ஐ., சுதா கைது செய்தார். இவ்வழக்கு ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் கார்த்திகேயன் வாதிட்டார்.
உள்நோக்கத்துடன் பிரபுதேவாவை கொலை செய்ததால் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2000 அபராதமும், கட்டத்தவறினால் மேலும் 2 மாதம் சிறை தண்டனையும், கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், கட்டத்தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்தும் ஏக காலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி மெகபூப் அலிகான் தீர்ப்பளித்தார்.