/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் லிப்ட் ஊழியர்கள் கெடுபிடி: மக்கள் தவிப்பு
/
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் லிப்ட் ஊழியர்கள் கெடுபிடி: மக்கள் தவிப்பு
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் லிப்ட் ஊழியர்கள் கெடுபிடி: மக்கள் தவிப்பு
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் லிப்ட் ஊழியர்கள் கெடுபிடி: மக்கள் தவிப்பு
ADDED : மே 20, 2025 12:39 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் செயல்படும் 'லிப்ட்'களில் பணிபுரியும் ஊழியர்கள் கெடுபிடியால் நோயாளிகள், உதவியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 700க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் உள்ள ஐந்து தளங்களில் நோயாளிகள் 2 முதல் 5 வது தளம் வரை நோயாளிகள் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர். நோயாளிகள் எக்ஸ்ரே, ஸ்கேன், ரத்தப்பரிசோதனை போன்றவைகளுக்காக தரை தளப்பகுதிக்கு வரும் நிலை உள்ளது.
தரை தளப்பகுதிக்கு நோயாளிகள் வரும் போது கூடவே உதவியாளர்கள் வருகை தருவார்கள். லிப்டுகளில் ஏறும் போது ஆப்பரேட்டர்களாக பணிபுரியும் பெண்கள் நோயாளிகளை மட்டுமே அனுமதிக்க முடியும் மற்றவர்கள் படிகளில் இறங்கி, ஏறும் படி கெடுபிடி செய்கின்றனர்.
நோயாளிகள் முடியாத நிலையில் லிப்டில் ஏதாவது பிரச்னைகள் ஏற்பட்டால் அவர்களை பாதுகாக்கவே உதவியாளர்கள் அனுப்பப்படுகின்றனர்.
அவர்களை லிப்டுகளில் அனுமதிக்காததால் நோயாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். சில நோயாளிகள் தலை சுற்று, மயக்க நிலையில் இருப்பவர்கள் உதவியாளர்கள் இல்லாமல் சிரமப் படுகின்றனர்.
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் லிப்டுகளில் நோயாளிகளையும், அவருடன் வரும் உதவியாளர்களையும் அனுமதிக்க வேண்டும்.
இதற்காக சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். நோயாளிகள் ஒரு புறமும், உதவியாளர்கள் ஒருபுறமும் சென்று ஓருவரை ஒருவர் தேடி கண்டு பிடிக்கும் நிலை உள்ளது.
இது போன்ற நேரங்களில் லிப்டுகளில் பணிபுரியும் ஊழியர்கள் கெடுபிடி காட்டாமல் மனித நேயத்துடன் பணியாற்ற முன் வர வேண்டும்.