/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடலில் அதிக வெளிச்சத்தில் மீன்பிடித்த லைட்டு பறிமுதல்
/
கடலில் அதிக வெளிச்சத்தில் மீன்பிடித்த லைட்டு பறிமுதல்
கடலில் அதிக வெளிச்சத்தில் மீன்பிடித்த லைட்டு பறிமுதல்
கடலில் அதிக வெளிச்சத்தில் மீன்பிடித்த லைட்டு பறிமுதல்
ADDED : ஆக 12, 2025 11:09 PM
தொண்டி:தேவிபட்டினம் கடலில் அதிக வெளிச்சத்தில் மீன்பிடித்ததால் லைட்டுகள், ஜெனரேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சில நாட்டுப்படகு மீனவர்கள் இரவில் கடலுக்குள் சென்று அதிக ஒளி கொண்ட லைட் வெளிச்சத்தில் மீன்பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
ஜெனரேட்டர் வசதியுடன் ஆழ்கடலுக்கு செல்லும் மீனவர்கள் கம்பங்களில் அதிக வெளிச்சமுள்ள பல்புகளை கட்டி வெளிச்சத்தை காட்டுகின்றனர். முரல், நண்டு, கணவாய் உள்ளிட்ட பல வகை மீன்கள் லைட் வெளிச்சத்தை பார்த்தவுடன் மொத்தமாக கடல் நீர்மட்டத்திற்கு மேலே வரும்.
அப்போது வலையை விரித்து மொத்தமாக பிடிக்கும் போது அதிக லாபம் கிடைப்பதால் சில மீனவர்கள் இச்செயலில் ஈடுபடுகின்றனர்.
நேற்று முன்தினம் தொண்டி மீன்வளத்துறை ஆய்வாளர் அபுதாகிர், கடலோர காவல் குழும அமலாக்கப்பிரிவு எஸ்.ஐ., குருநாதன், ஆகியோர் தேவிபட்டினம் முதல் முடிவீரன்பட்டினம் வரை உள்ள கடல் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தேவிபட்டினம் கடலில் பதிவு எண் இல்லாத ஒரு நாட்டுப் படகில் லைட் வெளிச்சத்தில் மீன்பிடித்த படகை பறிமுதல் செய்து படகுகளில் இருந்த 4 லைட்டுகள் மற்றும் ஜெனரேட்டர்களை பறிமுதல் செய்தனர்.
இனிவரும் நாட்களில் தொடர்ந்து இதே போல் மீன் பிடித்தால் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதோடு மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரித்த னர்.