ADDED : அக் 25, 2024 05:01 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம்பெரிய கண்மாய் பாலத்தில் மின்விளக்குகள்அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
ஆர்.எஸ்.மங்கலத்துடன் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி கிராமப் பகுதிகளை இணைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பெரிய கண்மாய் பாலம் உள்ளது. இரண்டு மாவட்ட கிராம மக்களும் இந்த பாலத்தால் பயனடைந்து வருகின்றனர்.
பாலத்தின் வழியாக அதிகளவில் போக்குவரத்து நடக்கிறது. இந்நிலையில் மாலை நேரங்களில் பெரிய கண்மாயில் தேங்கியுள்ள தண்ணீர், சுற்றுப்புற பகுதிகளை பார்வையிடுவதற்காக தினமும் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர் மக்களும் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், பாலத்தின் முகப்பு பகுதியில் மட்டும் ஒரு சோலார் மின்விளக்கு உள்ளது. கூடுதல் விளக்குகள் இல்லாததால் பாலத்தில் இருள் சூழ்ந்துள்ளது. இதனால் இரவு நேரத்தில் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பாலத்திற்கு சென்று வரும் பொது மக்களும் இருளில் சிரமம் அடைகின்றனர்.
எனவே அதிகாரிகள் பாலத்தில் மின்விளக்குகள்அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.