ADDED : ஜூன் 12, 2026 11:07 PM

அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் கண்காணிப்பு பணியை துவங்கினர்.
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்டது. ராமநாதபுரத்தில் 2 எஸ்.ஐ., 4 காவலர்கள் கொண்ட சிங்கப்பெண் அதிரடிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு எஸ்.ஐ., இரு காவலர்கள் கொண்ட இரு பிரிவாக பிரிக்கப்பட்டு 2 ஷிப்ட்களில் பணிபுரிவர்.
எஸ்.பி., சந்தீஷ் கூறியதாவது: சிங்கப்பெண் அதிரடிப்படையினருக்கு புகார்கள் குறித்து தகவல் வந்ததும் விரைந்து சென்று விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக தனி வாகனம் வழங்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை தடுப்பது, பொது இடங்களில் கண்காணிப்பது முக்கிய பணியாகும் என்றார்.
