ADDED : ஏப் 22, 2026 05:05 PM
அ நிறம் | அளவு
சாயல்குடி: சாயல்குடி அருகே நரிப்பையூர் டாஸ்மாக் கடையின் பின்புறம் சட்ட விரோதமாக மது விற்பதாக சாயல்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.ஐ., மணிகண்டன் மற்றும் தனிப்பிரிவு போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது நரிப்பையூர் டாஸ்மாக் கடைக்கு பின்புறம் மறைவான இடத்தில் வைத்து சட்ட விரோதமாக மது விற்பது தெரிய வந்தது. நரிப்பையூரை சேர்ந்த சத்தியநாதன் 48, கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 320 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
