UPDATED : நவ 15, 2026 07:03 PM
ADDED : நவ 15, 2026 07:00 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: தமிழ்நாடு கலை இலக்கிய மன்றம் சார்பில் ராமநாதபுரத்தில் மாதாந்திர கூட்டம் நடந்தது.
மன்றத் தலைவர் சவுந்திரபாண்டியன் தலைமை வகித்தார். மானுடப்பிரியன் முன்னிலை வகித்தார். ‛மண் மணக்கும் நிலங்கள்’தலைப்பில் கவிதை சங்கமம் நடந்தது. இதில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, நவ இந்திய சிற்பி ஆகிய தலைப்புகளில் கவிதைகள் வாசித்தனர். கருத்தியல் களம் நிகழ்வில் விண்வெளி நாயகன், இலக்கியத்தில் பிரிவு ஆகிய தலைப்புகளில் விவாதிக்கப்பட்டது. நிகழ்வில், மாவட்ட நிர்வாகிகள் வையாச்சாமி, ஜனார்த்தனன் பங்கேற்றனர்.
