/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆக்ஸ்போர்டில் முதல்வர் பேச்சு நேரடி ஒளிபரப்பு
/
ஆக்ஸ்போர்டில் முதல்வர் பேச்சு நேரடி ஒளிபரப்பு
ADDED : செப் 07, 2025 02:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: தமிழக முதல்வர் ஆக்ஸ்போர்டு பல்கலையில் ஈ.வே.ரா படத்தை திறந்து வைத்து சுயமரியாதை இயக்கம், அதன் மரபுகள் எனும் மாநாட்டில் பேசினார்.
இந்நிகழ்வை பொதுமக்கள் காணும் வகையில் ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க., சார்பில் ராமநாதபுரம் பழைய பஸ்ஸ்டாண்டில் ஒளிபரப்பப்பட்டது.
எல்.இ.டி., திரையானது பஸ் திரும்பும் பகுதியில் அமைத்திருந்ததால் பொதுமக்கள் நின்று உரையை கேட்பதற்கான வசதி இல்லை.
இதனால் எல்.இ.டி., திரை அமைத்தும் பயனில்லாமல் போனது. நின்று கவனிக்கும் வகையில் எல்.இ.டி., திரையை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.