/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால்... உயிர் போகுதுங்க: போக்குவரத்து விதியை மீறுபவர் மீது நடவடிக்கை தேவை
/
ராமநாதபுரத்தில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால்... உயிர் போகுதுங்க: போக்குவரத்து விதியை மீறுபவர் மீது நடவடிக்கை தேவை
ராமநாதபுரத்தில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால்... உயிர் போகுதுங்க: போக்குவரத்து விதியை மீறுபவர் மீது நடவடிக்கை தேவை
ராமநாதபுரத்தில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால்... உயிர் போகுதுங்க: போக்குவரத்து விதியை மீறுபவர் மீது நடவடிக்கை தேவை
ADDED : டிச 22, 2025 05:21 AM

ராமநாதபுரம்:மாவட்ட தலைநகரமான ராமநாதபுரத்தில் நாளுக்குநாள் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில், கனரகவாகனங்கள், டூவீலர்களில் சிலர் அசுரவேகத்தில் செல்வதால் விபத்தில் பலியாகின்றனர். எனவே வாகனங்களில் வேககட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும். போக்குவரத்து விதிகளை மீறி அதிவேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமநாதபுரத்தில் பெரும்பான்மையான விபத்துகள் அசுர வேகத்தில் வாகனங்களை இயக்குவதாலும், மது அருந்தி வாகனம் ஓட்டுவதாலும் நிகழ்கின்றன. இவற்றில் ஏற்படும் உயிரிழப்புகளின் விகிதம் அதிரித்த வண்ணம் உள்ளன.
பழுதான ரோடுகள், அலைப்பேசி பேசிக்கொண்டு வாகனத்தை ஓட்டுவது, அதிக வெளிச்சமான விளக்குகள், வேகத்தடைகள் இருப்பது பற்றி அறிவிப்பு இல்லாதது, வாகனங்களில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றிச் செல்வது, இரவு நேரங்களில் ரோட்டோரம் வாகனங்களை நிறுத்துவது போன்றவை விபத்துக்கு காரணமாக உள்ளது. அதிவேகத்தில் வாகனத்தை ஓட்டும்போது, திருப்பங்கள், தடைகளில் பிரேக் பிடிப்பது கடினமாகிறது. இதனால் வாகனங்கள் கட்டுப்பாடின்றி விபத்தை ஏற்படுத்துகிறது. அதேபோல் உள்ளூர் சாலைகள் மட்டுமின்றி தேசிய நெடுஞ்சாலைகளும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. ராமநாதபுரம்--ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை மணல் மேடாக காட்சியளிக்கின்றன. இவற்றில் வேகமாக செல்லும் போது டூவீலர்கள் வாகனங்கள் விபத்துகளில் சிக்குகின்றன.
காற்றில் பறக்கும் விதிகள்
ராமநாதபுரத்தில் ஹெல்மேட் அணியாமல் செல்வது, ரோட்டோரம் கனரக வாகனங்களை நிறுத்தை போக்குவரத்து போலீசார் கண்டுக் கொள்வதில்லை. அரண்மனை பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டாலும் அவற்றை பொதுமக்கள் கடைபிடிப்பது இல்லை. சாலை விதிகளில் முக்கியமாக ஒன்று ஆம்புலன்சுக்கு வழிவிடுவது. ஆனால் அதே ஆம்புலன்சை பின்தொடர்ந்து வேகமாக செல்லும் டூவீலர்களும், ஆட்டோக்களும் விபத்துகளை ஏற்படுத்துகின்றன.
கட்டுப்பாடு தேவை
அரசு பஸ்கள், கனரக வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவியை பொருத்தியுள்ளதா என்பதை போலீசார் கண்காணிக்க வேண்டும். சென்னை போன்ற பெருநகர் பகுதியில் 40 கி.மீ., வேகத்துக்குள் இயக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் வேகக்கட்டுப்பாட்டை மீறும் வாகனங்களை தானியங்கி முறையில் கண்காணித்து அபராதம் விதிக்கப்படுகிறது. அதுபோன்ற நடைமுறை நகரின் முக்கியப் பகுதிகளில் செயல்படுத்த வேண்டும். சிக்னல்களில் சாதாரண சி.சி.டி.வி., கேமராக்களுக்கு பதிலாக தானியங்கி முறையில் நம்பர் பிளேட் அடையாளம் காணும் கேமராக்களை பொருத்த வேண்டும். நகரின் நுழைவு வாயில்களில் வேகக்கட்டுபாடு கருவி பொருத்த வேண்டும். இதனால் நகர் பகுதிகளில் ஏற்படும் விபத்துகளை குறைக்க முடியும்.

