நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே அண்ணாமலை நகரை சேர்ந்தவர் மணிமுத்து 65. இவர் வீட்டருகே ஆடுகளை கட்டியிருந்த நிலையில் தெரு நாய்கள் பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்து குதறின. இதில் இரண்டு ஆடுகள் பலியாகின.
காயம் அடைந்த ஆடுகளுக்கு ஆர்.எஸ். மங்கலம் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்பகுதியில் தொடர்ந்து விவசாயிகளின் கால்நடைகள் நாய்களால் பாதிக்கப்படுவதால் நாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.