/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பெருமாள்கோவில் கிராமத்தில் கால்நடை விழிப்புணர்வு முகாம்
/
பெருமாள்கோவில் கிராமத்தில் கால்நடை விழிப்புணர்வு முகாம்
பெருமாள்கோவில் கிராமத்தில் கால்நடை விழிப்புணர்வு முகாம்
பெருமாள்கோவில் கிராமத்தில் கால்நடை விழிப்புணர்வு முகாம்
ADDED : ஆக 30, 2025 03:42 AM
பரமக்குடி: பரமக்குடி ஒன்றியம் பெருமாள் கோவில் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது.
பரமக்குடி கால்நடை துறை உதவி இயக்குனர் டாக்டர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். உதவி மருத்துவர்கள் புவனேஸ்வரி, விக்னேஷ் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.
ஆய்வாளர் பாஸ்கரன் வரவேற்றார். 40 விவசாயிகள் தங்களின் கால்நடைகளை முகாமிற்கு அழைத்து வந்தனர்.
49 பசு மாடுகள், செம்மறி ஆடுகள் 315, வெள்ளாடுகள் 285, நாய்கள் 18, கோழிகள் 223 என சிகிச்சை அளிக்கப்பட்டது.
அப்போது அறுவை சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல், ஆண்மை நீக்கம், குடற்புழு நீக்கப் பணிகள் நடந்தன. மேலும் மாடுகளின் கால் காணை, வாய் காணை மற்றும் கன்று வீச்சு நோய், ஆடுகளில் ஆட்டுக்கொல்லி நோய் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சிறந்த கால்நடை வளர்ப்புக்கான பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கால்நடை பராமரிப்பு உதவியாளர் அழகுமீனாள் நன்றி கூறினார்.

