ADDED : ஜூலை 03, 2025 10:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி; தொண்டியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி (கிழக்கு) எல்.கே.ஜி., வகுப்பு துவக்க விழா நடந்தது.
இதில் பங்கேற்ற குழந்தைகள் அ, ஆ., எழுதி தங்களின் கல்வி பயணத்தை துவக்கினர். தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜகான்பானு தலைமை வகித்தார்.தலைமை ஆசிரியர் லியோ ஜெரால்டு எமர்சன் முன்னிலை வகித்தார். பெற்றோர், குழந்தைகள் பங்கேற்றனர்.
குழந்தைகளுக்கு புத்தகப்பை, அடையாள அட்டை மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டன.