/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மகளிர் சுயஉதவிக் குழுவிற்கு கடன் உதவி வழங்கும் விழா
/
மகளிர் சுயஉதவிக் குழுவிற்கு கடன் உதவி வழங்கும் விழா
மகளிர் சுயஉதவிக் குழுவிற்கு கடன் உதவி வழங்கும் விழா
மகளிர் சுயஉதவிக் குழுவிற்கு கடன் உதவி வழங்கும் விழா
ADDED : ஜூலை 30, 2025 11:26 PM
ராமநாதபுரம்; ராமநாதபுரம் பேங்க் ஆப் இந்தியா வங்கி மற்றும் சர்வோதயா அறக்கட்டளை யுடன் இணைந்து மகளிர் சுய உதவிக் குழுகளுக்கு ரூ.50 கோடி கடன் உதவி வழங்கும் விழா பட்டணம்காத்தான் டி-பிளாக்கில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது.
வங்கியின் சென்னை கள பொதுமேலாளர் அனிதா மொஹண்டி தலைமை வகித்து பேசுகை யில், வங்கிகளில் பல்வேறு கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றை பயன்படுத்தி பெண்கள் சுயதொழில் செய்து பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்றார்.
வங்கியின் மதுரை மண்டல மேலாளர் கிேஷார் குமார் வர வேற்றார்.
சர்வோதயா அறக்கட்டளை முதன்மை நிர்வாகி ராஜன், சுய உதவிக்குழு செயல்பாட்டு முறைகள் குறித்து விரிவாக பேசினார். 300 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 50 கோடிக்கான காசோலைகள் வழங்கப்பட்டது.
வங்கி அலுவலர்கள், பெண்கள் பலர் பங் கேற்றனர்.