/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் தொழில் துவங்க மானியத்துடன் கடனுதவி

ADDED : மே 29, 2025 11:17 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட தொழில் மையம் சார்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் ரூ.15 லட்சம் வரை 25 சதவீதம் அரசு மானியத்துடன் தொழில் துவங்க வங்கி கடனுதவி வழங்கப்படுகிறது.
இதன்படி படித்த வியாபாரத் தொழில்களுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை வங்கி கடன் உதவி பெறலாம். திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அரசு மானியம் அதிகபட்சமாக ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பொதுப்பிரிவினருக்கு வயது வரம்பு 18 முதல் 45 வயதிற்குள்ளும், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், திருநங்கைகள், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கு 18 வயது முதல் 55 வயதிற்குள்ளும், ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகம், தொலைபேசி எண் 04567- -290459, அலைபேசி எண்: 89255 33983, 89255 33984 எண்களை தொடர்பு கொள்ளலாம்.