/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கூட்டுறவு வங்கியில் சாதாரண வட்டியில் கடன் தீர்வு திட்டம்
/
கூட்டுறவு வங்கியில் சாதாரண வட்டியில் கடன் தீர்வு திட்டம்
கூட்டுறவு வங்கியில் சாதாரண வட்டியில் கடன் தீர்வு திட்டம்
கூட்டுறவு வங்கியில் சாதாரண வட்டியில் கடன் தீர்வு திட்டம்
ADDED : டிச 05, 2024 05:37 AM
ராமநாதபுரம்: கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கி தவனை முடிந்தும் செலுத்தாமல் உள்ளவர்கள், 9 சதவீதம் சாதாரண வட்டியுடன் நிலுவைத்தொகையை 2025 மார்ச் 12க்குள் ஒரே தவனையில் செலுத்தி பயன்பெறலாம்.
ராமநாதபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி, மண்டலத்திலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், நகரக்கூட்டுறவு வங்கிகள், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் ஆகியவற்றில் உறுப்பினர்கள் கடன் பெற்றுள்ளனர்.
இதில், 2022 டிச.,31ல் முழுமையாக தவனை தவறி நிலுவையில் உள்ள கடன்களுக்கு சிறப்புகடன் தீர்வு திட்டம் 2023ல் செயல்படுகிறது.
இதன்படி 2024 செப்.,12க்கு முன்பு 25சதவீதம் தொகை செலுத்தி ஒப்பந்தம் மேற்கொள்ளாதவர்களும், ஒப்பந்தம் மேற்கொண்டும் எஞ்சிய 75 சதவீதம் தொகையை செலுத்தாவர்களும் மொத்த கடன் தொகையை, நிலுவை தீர்வு செய்யும் நாள் வரை 9 சதவீதம் சாதாரண வட்டியில் ஒரே தவணையில் செலுத்தி பயன்பெறலாம்.
2022 டிச.,31 இல் முழுமையாக தவனை தவறி 3 ஆண்டுகளுக்கு மேலான அதாவது 2019 டிச.,31க்கு முன்பு வேளாண் கடன்கள், பயிர்கடனாக வழங்கப்பட்டது. பண்ணை சார்ந்த நீண்டகால கடன்கள், சிறுதொழில் கடன்கள், மகளிர் தொழில் முனைவோர் கடன்கள் ஆகியவற்றையும் 9 சதவீதம் சாதாரண வட்டியுடன் நிலுவைத்தொகையை 2025 மார்ச் 12க்குள் ஒரே தவனையில் செலுத்தி தீர்வு செய்து கொள்ளலாம் என ராமநாதபுரம் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜீனு தெரிவித்துள்ளார்.