/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இடப்பிரச்னை: 3 பேர் மீது வழக்கு
/
இடப்பிரச்னை: 3 பேர் மீது வழக்கு
ADDED : பிப் 24, 2024 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே எஸ்.ஆர்.மணக்குடியை சேர்ந்தவர் பழனி 45. இவரது வீட்டின் பின்புறம் உள்ள இடத்தை வாங்குவதற்காக இடத்தின் உரிமையாளர்களிடம் முன்பணம் கொடுத்துள்ளார். முன்பணம் கொடுத்திருந்த நிலையில் பத்திரப்பதிப்புக்கு முன்பாக அப்பகுதியில் பழனி வைக்கோல் சேமித்து பயன்படுத்தி வந்துள்ளார்.
பத்திரப் பதிவு செய்வதற்கு முன் எவ்வாறு பயன்படுத்தலாம் எனக் கூறி இடத்தின் உரிமையாளர்கள் பழனியை தாக்கினர். இதில் காயம் அடைந்த பழனி புகாரில், அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் 44, சித்ரா 41, அபினேஷ் 22, ஆகிய மூவர் மீது திருப்பாலைக்குடி போலீஸ் எஸ்.ஐ., பூ முத்து வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.