/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேவிப்பட்டினத்தில் பூட்டி கிடக்கும்அம்மா பூங்கா: திறக்க வலியுறுத்தல்

ADDED : ஜன 07, 2024 04:14 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே தேவிப்பட்டினத்தில் அம்மா பூங்கா பயன்பாடில்லாமல் பூட்டப்பட்டுள்ளதால் பயன்பாட்டிற்குகொண்டுவர மக்கள் வலியுறுத்தினர்.
தேவிப்பட்டினம் கடலில் உள்ள நவபாஷாண கோயில், கடல் அடைத்தஆதிஜெகநாதபெருமாள் கோயில் நவக்கிரக பரிகார ஸ்தலமாகவிளங்குகிறது. தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும்பக்தர்கள் வருகின்றனர்.
அவர்கள் ஓய்வெடுக்கவும், சிறுவர்கள் விளையாடும் வகையில் கடற்கரை பகுதியில் 2017ம் ஆண்டில் அம்மாபூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் ரூ.31 லட்சத்து 52 ஆயிரத்தில்அமைக்கப்பட்டுள்ளது. இப்பூங்கா சரிவர பராமரிக்கப்படாமல் செடி,கொடிகள் வளர்ந்து புதர் மண்டியும், விளையாட்டு சாதனங்கள் சேதமடைந்தும் உள்ளன.
பல மாதங்களாக பூட்டிக் கிடப்பதால்சிறுவர்கள் விளையாட முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அம்மா பூங்கா, உடற்பயிற்சி கூடத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண் டும் என தேவிப்பட்டினம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.