ராமநாதபுரத்தில் பூட்டிக் கிடக்கும்கழிப்பறை: பயன்படுத்த கோரிக்கை
ராமநாதபுரத்தில் பூட்டிக் கிடக்கும்கழிப்பறை: பயன்படுத்த கோரிக்கை
ADDED : செப் 27, 2026 11:37 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகர் யானைக்கல் வீதியில் நகராட்சி கழிப்பறை பயன்பாடு இல்லாமல் பூட்டிக் கிடக்கிறது. அதனை செப்பனிட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என மக்கள் வலி யுறுத்தினர்.
நகர்ப்புறங்களில் திறந்தவெளி மலம் கழித்தலற்ற நிலையை உருவாக்கவும், பொதுமக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தவும் நகராட்சி பொது கழிப்பறை திட்டம் செயல்படுத்தப் படுகிறது.
இதன்படி ராமநாதபுரத்தில் பல லட்சம் செலவில் கட்டப்படும் நகராட்சி கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை. குறிப்பாக யானைக்கல் வீதியில் சில மாதங்களாக கழிப்பறைகள் பயன்படுத்தப்படாமல் பூட்டிக் கிடப்பதால் ஏழை மக்கள், குறிப்பாக வியாபாரம் செய்யும் பெண்கள் சிரமப்படுகின்றனர். எனவே கழிப்பறை கட்டடத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
