/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேவிபட்டினம் பஸ் ஸ்டாண்டில் பூட்டிக்கிடக்கும் கழிப்பறை
/
தேவிபட்டினம் பஸ் ஸ்டாண்டில் பூட்டிக்கிடக்கும் கழிப்பறை
தேவிபட்டினம் பஸ் ஸ்டாண்டில் பூட்டிக்கிடக்கும் கழிப்பறை
தேவிபட்டினம் பஸ் ஸ்டாண்டில் பூட்டிக்கிடக்கும் கழிப்பறை
ADDED : ஜூன் 18, 2025 11:28 PM

தேவிபட்டினம்: தேவிபட்டினத்தில் நவபாஷாணம் அமைந்துள்ளதால் அப்பகுதிக்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
முக்கியத்துவம் வாய்ந்த பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பஸ் ஸ்டாண்ட் கழிப்பறை கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக பூட்டப்பட்டுள்ளது.
இதனால் பஸ் ஸ்டாண்ட் வரும் பெண் பயணிகள் உட்பட பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
தேவிபட்டினம் ஊராட்சி செயலாளர் ஆனந்தியிடம் கேட்டபோது கழிப்பறையை குத்தகைக்கு எடுத்துள்ள ஒப்பந்ததாரருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் சில தினங்கள் கழிப்பறை திறக்கப்படவில்லை. ஊராட்சி பணியாளர்கள் மூலம் கழிப்பறையை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.