/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பூட்டி கிடக்கும் கழிப்பறை அரசு நிதி வீணடிப்பு
/
பூட்டி கிடக்கும் கழிப்பறை அரசு நிதி வீணடிப்பு
ADDED : மே 16, 2025 03:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாலிநோக்கம்: வாலிநோக்கம் ஊராட்சியில் மீனவர்கள் வசிக்கும் பகுதியில் மன்னார் வளைகுடா கடற்கரை அருகே கட்டப்பட்ட பொதுக் கழிப்பறை வளாகம் பயன்பாடின்றி பூட்டியே வைக்கப்பட்டுள்ளதால் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது.
மீனவ கிராம மக்கள் பயன்பாட்டிற்கான ஐந்து கழிப்பறை வளாகம் 2023ல் கட்டப்பட்டது. ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கழிப்பறை வளாகம் எவ்வித பயன்பாடின்றி பூட்டியே வைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வரும் நிலையில் ஊராட்சி நிர்வாகம் கழிப்பறைகளை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.