ADDED : செப் 02, 2025 10:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை; திருவாடானை நீதிமன்றத்தில் செப்.,13 ல் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய லோக் அதாலத் நடைபெற உள்ளது.
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் சமரசம் செய்யக்கூடிய சிறு குற்ற வழக்குகள், காசோலை மோசடி, வாகன விபத்து இழப்பீடு, நில ஆர்ஜிதம், சிவில் வழக்குகள் தொழிலாளர் மற்றும் குடும்ப நல வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளபடுகின்றன. லோக் அதாலத்தில் சமரச தீர்வு காணும் பணியில் சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.