ADDED : மார் 13, 2024 12:40 AM
திருவாடானை- லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் ஊராட்சிகளில் ஆமை வேகத்தில் நடந்த பல்வேறு வளர்ச்சிப் பணிகள் வேகம் எடுத்துள்ளது.
ஊராட்சிகளில் ரோடு அமைப்பது, குடிநீர் விநியோகம், கழிப்பறை மற்றும் அடிப்படை வசதிகள் ஆமை வேகத்தில் நடந்து வந்தது.
இது போன்ற பணிகளை கணக்கெடுத்து விரைவாக முடிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் பல மாதங்களாக நிலுவையில் உள்ள பணிகள் மற்றும் முடிவ பெறாத வளர்ச்சி பணிகளை தாமதமின்றி முடிப்பதற்கு ஊராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் நிலுவையில் இருந்த பணிகள் மும்முரமாக நடக்கிறது.
ஊராட்சி அலுவலர்கள் கூறியதாவது: நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டது. புதிய பணிகளுக்கு கலெக்டர் நிர்வாக அனுமதி வழங்கியுள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் டெண்டர் விட முடியாது என்பதால் அனைத்து பணிகளுக்கும் டெண்டர் விடப்பட்டு பணிகள் வேகமாக நடக்கிறது என்றனர்.
இதே போல் மற்ற துறைகளில் உள்ள பணிகளும் மும்முரமாக நடக்கிறது. அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

