ADDED : ஜன 07, 2025 04:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன்துறை சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பெயரில் நெடுந்துார ஓட்டப்போட்டி நடந்தது.
பட்டணம்காத்தான் இ.சி.ஆர்., நான்குவழிச்சாலை பிரிவில் நெடுந்துார ஓட்டப்போட்டியை எஸ்.பி., சந்தீஷ் துவக்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன்துறை அலுவலர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். 17 முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ., பெண்களுக்கு 5 கி.மீ., மற்றும் 25 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆண்களுக்கு 10 கி.மீ., பெண்களுக்கு 5 கி.மீ., நெடுந்துார ஓட்டப்போட்டிகள் நடந்தது.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. உடற்கல்வி இயக்குநர்கள், ஆசிரியர்கள், பயிற்றுனர்கள், மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

