/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் சர்வர் முடங்கியதால் நீண்டநேரம் காத்திருப்பு
/
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் சர்வர் முடங்கியதால் நீண்டநேரம் காத்திருப்பு
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் சர்வர் முடங்கியதால் நீண்டநேரம் காத்திருப்பு
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் சர்வர் முடங்கியதால் நீண்டநேரம் காத்திருப்பு
ADDED : ஜூலை 16, 2025 11:18 PM
திருவாடானை: திருவாடானை தாலுகாவில் நேற்று முதல் கட்டமாக உங்களுடன் ஸ்டாலின் முகாம் துவங்கியது. சர்வர் பிரச்னையால் மக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
திருவாடானை தாலுகாவில் நேற்று முதல் கட்டமாக உங்களுடன் ஸ்டாலின் முகாம் அஞ்சுகோட்டை, குஞ்சங்குளம், திருவாடானை ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த மக்களுக்கு திருவாடானையில் நடந்தது. ஆனால் ஆதியூர், அரும்பூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளை சேர்ந்த மக்களும் முகாமிற்கு வந்தனர்.
குறிப்பிட்ட 3 ஊராட்சி மக்களும் மட்டும் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டதால் மற்ற ஊராட்சியை சேர்ந்த மக்கள் திரும்பிச் சென்றனர். ஆன்லைன் மூலம் அனைத்து மனுக்களும் பதிவு செய்யப்பட்டது. சர்வர் பிரச்னை ஏற்பட்டதால் ஒரு மனுவை பதிவு செய்ய நீண்ட நேரம் ஆனது.
சிலர் ஒரு மணி நேரம் வரை காத்திருந்தனர். 12:00 மணிக்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பார்வையிட்டார். பொதுமக்களிடமிருந்து மொத்தம்487 மனுக்கள் பெறப்பட்டன. இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை சம்பந்தமாக 101, ஊரக வளர்ச்சித்துறைக்கு 93, மாற்றுதிறனாளிதுறை 7, வேலைவாய்ப்புத்துறை 2, கூட்டுறவுத்துறை 3, நல்வாழ்வுத்துறை 4, மின்துறை 5, பிற்பட்டோர் நலத்துறை 1, மகளிர் உதவித் தொகை கேட்டு 271 மனுக்கள் வந்தன.
தாசில்தார் ஆண்டி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜி, ஆரோக்கிய மேரிசாராள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

